தங்கம்

தங்கம் விலை குறைவு.... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் மீண்டும் பயணிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த 9-ந் தேதி பவுனுக்கு ரூ.1,480-ம், 10-ந் தேதி ரூ.1,200-ம், 11-ந் தேதி ரூ.1,480-ம் அதிகரித்து இருந்தது. இப்படியாக 3 நாட்களில் மட்டும் ரூ.4 ஆயிரத்து 160 உயர்ந்து காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 12-ம் தேதியும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 770-க்கும், ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து