வணிகம்

தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்

தினத்தந்தி

மும்பை,

இந்திய பங்குச்சந்தை கடந்த 2ம் தேதி முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி, இந்திய பங்குச்சந்தை இன்று (21.01.2026 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 75 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 157 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 603 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 237 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 963 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 270 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 909 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

152 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 155 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 626 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 270 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து