சினிமா செய்திகள்

பால் பண்ணை ஆரம்பித்த பிரபல சீரியல் நடிகை: புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து

பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி சொந்தமாக பால் பண்ணையை ஆரம்பித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அந்த சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் சீரியல் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது. கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே சீரியலின் கதை நகர்கிறது. கயலுக்கு வரும் எல்லா தடைகளையும் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே கதை.

இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பசு மாட்டில் இருந்து பால் கறக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "ஒரு நாள் 50 மாடுகள் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது பால் பண்ணையை ஆரம்பித்து உள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார். நடிகை சைத்ராவின் புதிய முயற்சிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை