சினிமா செய்திகள்

ஜாக்கிசானை வைத்து அந்நியன் ரீமேக்- தயாரிப்பாளர் திடீர் அறிவிப்பு

2005-ம் ஆண்டு விக்ரம், சதா, விவேக், பிரகாஷ்ராஜ், நாசர் நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் அந்நியன்.

ஜாக்கிசானை வைத்து அந்நியன் ரீமேக்- தயாரிப்பாளர் திடீர் அறிவிப்பு

சென்னை

2005-ம் ஆண்டு விக்ரம், சதா, விவேக், பிரகாஷ்ராஜ், நாசர் நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் அந்நியன். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இப்போது இந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்ய உள்ளார் ஷங்கர். தற்போது ராம்சரண் படத்தை இயக்கும் ஷங்கர், அதன்பிறகு இந்தியன் 2 படத்தை முடித்ததும், இந்த படத்தை துவங்க எண்ணி உள்ளார். இதற்கிடையே

இதற்கான அறிவிப்பு வெளியானது. இக்கதை உரிமம் தொடர்பாக ஷங்கருக்கும், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் ஆரம்பமானது.

தற்போது ஜாக்கிசான் மற்றும் பாலிவுட் நடிகர் ஒருவரை வைத்து அந்நியனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாக்கி சானை பல வருடங்களாக நன்கு தெரியும். கமல் நடிப்பில் நான் தயாரித்திருந்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட அவர் வந்திருந்தார். அடுத்த ஆண்டு அந்நியன் படத்தின் ரீமேக் பணிகளைத் தொடங்க உள்ளேன்" என ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு