சட்டம் என் கையில் படத்தில் தொடங்கி, பாகுபலி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதில் வில்லனாக 75 படங்களிலும், கதாநாயகனாக 100 படங்களிலும் நடித்து இருக்கிறார். மீதமுள்ள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
250 படங்களில் பெரியார், அமைதிப்படை, நடிகன், 9 ரூபாய் நோட்டு, பூவிழி வாசலிலே, வேதம் புதிது, கடலோர கவிதைகள், பாகுபலி உள்பட பல படங்களை மறக்க முடியாது. விதம்விதமாக வேஷம் போட்டு இருக்கிறேன். இப்போது 10 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார், சத்யராஜ். திறமைக்கு என்றும் மரியாதைதான்.