சென்னை,
தமிழ் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோவாக நடிகர் விஷால் நீண்ட காலமாக இருந்து வருகிறது. நடிகர் விஷால் நடித்த தமிழ் படங்கள் அனைத்து ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இதனால் அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில், சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் இலவச திருமணம் இன்று செய்து வைத்தார். அத்துடன் 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினார்.
திருமணத்தின் போது 3 மத முறையிலும் வழிபட்டு, மணமக்களுக்கு நடிகர் விஷால் தாலி எடுத்து கொடுத்தார். அதன்பின்னர் 11 திருமண தம்பதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.