சினிமா செய்திகள்

நடிகர் தனுசின் “கலாட்டா கல்யாணம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள கலாட்டா கல்யாணம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

டைரக்டர் ஆனந்த்.எல். ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தின் மூலம் நடிகர் தனுஷ் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அதற்கு அடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ஷமிதாப் படத்தில் வாய்பேசாத கலைஞனாக நடித்து அசத்தினார்.

தற்போது, மீண்டும் ஆனந்த்.எல். ராய் இயக்கத்தில் 'அத்ரங்கி ரே' படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார்.

இந்த படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் ரிலீசாக இருக்கிறது. வருகிற டிசம்பர் மாதம் 24-ந்தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாகிறது.

இந்த நிலையில் 'கலாட்டா கல்யாணம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு