சினிமா செய்திகள்

''அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை'' - நடிகை ரித்திகா நாயக்

நடிகை ரித்திகா தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் குறித்து பகிர்ந்தார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான மிராய் தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், நடிகை ரித்திகா தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் குறித்து பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், ''எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிற எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க நான் ரெடி. சூப்பர் ஹீரோ படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அனுமான் எனக்கு ரொம்பப் பிடித்த படம். ஆக்சன், காதல் படங்கள்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச வகைகள்'' என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து