ஜோத்பூர்,
நடிகர் சல்மான்கானுக்கு மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
1998 ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த இந்திப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது சல்மான்கான் வனப் பகுதிக்கு சென்று 2 மான்களை வேட்டையாடினார்.
வனப்பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டு கிராம மக்கள் சென்ற போது துப்பாக்கியுடன் ஜீப்பில் வந்த சல்மான்கான் பிடிபட்டார். 20 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் ஜோத்பூர் கீழ் கோர்ட்டு சல்மான்கானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து சல்மான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சிறையில் 106 ம் எண் அறை
ஒதுக்கப்பட்டது. இந்த அறையில் தான் சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவும் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவருடன் சல்மான்கானும் இருக்கிறார்.
சல்மான்கான் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவரது முகம் வாட்டத்துடன் சோகமாக இருந்தார். மிகவும் களைப்புடன் இருந்ததால் அவருக்கு முதலில் சிறையில் டீயும், குளுகோஸ் பிஸ்கட்டுகளும் வழங்கப்பட்டது. அதை வாங்கி சாப்பிட்டார்.
சல்மான்கான் முதல் நாள் இரவில் தூக்கமின்றி தவித்ததாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று சல்மான்கானை ஹிந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா சிறைக்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. நட்பின் அடையாளமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சல்மான்கான் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று தள்ளிவைக்கப்படு இருந்தது. அதன் படி மனு மீதான முடிவு குறித்து உணவு இடைவேளைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்து இருந்தார். பின்னர் ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டட்து. பின்னர் சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் நீதிமன்றம்.