சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஹே சினாமிகா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

நடிகர் துல்கர் சல்மான நடித்துள்ள 'ஹே சினாமிகா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் இன்னும் பலர் நடித்துள்ளனர். 

தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மனி' திரைப்படத்தில் வரும் ஹே சினாமிகா பாடலின் மூலம் ஈர்க்கப்பட்ட பிருந்தா கோபால் இந்த திரைப்படத்திற்கு 'ஹே சினாமிகா' என்று பெயர் வைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பாடலாசிரியர் மதன் கார்க்கி 'ஹே சினாமிகா திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை