சினிமா செய்திகள்

ஹிட்லர் படத்தின் 'ஜோக்கர் தீம்' வீடியோ பாடல் வெளியானது

முன்னதாக ஹிட்லர் படத்தின் டப்பாஸ், அடியாத்தி மற்றும் 'ரிங்கு ஜக்கு' ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலாகின.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் விஜய் ஆண்டனி 'ரோமியோ', 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார்.

ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரெய்லர் வெளியானநிலையில், 'டப்பாஸ்' `அடியாத்தி' 'ரிங்கு ஜக்கு' ஆகிய பாடல்களும் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், விவேக் - மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து ''ஜோக்கர் தீம்' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் 27-ம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை