சினிமா செய்திகள்

துபாயில் அல்லு அர்ஜூனுக்கு மெழுகு சிலை

துபாயில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் அல்லு அர்ஜூனுக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

தெலுங்கில் முன்னணி நடிகராக திகழும் அல்லு அர்ஜூன், 'புஷ்பா' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

தற்போது புஷ்பா படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

தற்போது துபாயில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. இந்த மெழுகு சிலை இந்த ஆண்டு இறுதியில் திறக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி மெழுகு சிலை ஏற்பாட்டாளர்கள் அல்லு அர்ஜூனை சந்தித்து உடல் அளவீடுகளை எடுத்துள்ளனர். அச்சு அசலாக இந்த சிலை அமையவேண்டும் என்பதால் சில மணி நேர இடைவெளியிலும் தொடர் அளவீடுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் தற்போது இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகு சிலை திறக்கப்பட உள்ள நிலையில் அல்லு அர்ஜூனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சிறப்பை பெறும் முதல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை