சினிமா செய்திகள்

பிரதீப் ரங்கநாதனின் வெற்றி பற்றி கவின் கருத்து

பிரதீப்பின் வளர்ச்சி குறித்து கவின் சொன்ன வார்த்தை இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக ஹிட் கொடுத்த பிரதீப், அடுத்து லவ் டுடே மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்து டிராகன் மூலம் அடுத்த ரூ.100 கோடி படத்தை கொடுத்தார்.

சமீபத்தில் டியூட் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக ரூ.100 கோடி படத்தை கொடுத்து சாதனை படைத்தார். இந்நிலையில், பிரதீப்பின் இந்த வளர்ச்சி குறித்து கவின் சொன்ன வார்த்தை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசுகையில், "பிரதீப் ரங்கநாதனை நான் ஒரு எமெர்ஜிங் ஸ்டாராகப் பார்க்கவில்லை, அவரை ஏற்கனவே ஸ்டாராகதான் பார்க்கிறேன். தொடர்ந்து 3 முறை ரூ.100 கோடி படங்களை கொடுப்பது எளிதல்ல.

அதற்கு அதிர்ஷ்டமோ அல்லது வேறு ஏதோ காரணமில்லை. அவர் கதை மற்றும் பிறவற்றை சரியாகத் திட்டமிடுகிறார், அதனால்தான் அது நடக்கிறது என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து