கல்வி/வேலைவாய்ப்பு

டிகிரி முடிச்சிருக்கீங்களா?: பேங்க் ஆப் பரோடாவில் வேலை.. 2,700 பணியிடங்கள்

பேங்க் ஆப் பரோடாவில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் சேர்த்து மொத்தம் 2,700 பணியிடங்களும் தமிழகத்தில் மட்டும் 159 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

வங்கியில் வேலை பணி நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா

பணி இடங்கள்: 2,700 (தமிழ்நாட்டில் 159 காலி இடம்)

பதவி பெயர்: அப்ரண்டீஸ் பயிற்சி (ஒரு ஆண்டு)

கல்வி தகுதி: 1-11-2025 அன்றைய தேதிப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

வயது: 1-11-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20, அதிகபட்ச வயது: 28. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

ஊக்கத்தொகை: மாதம் ரூ.15,000

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி தேர்வு, ஆவண பரிசோதனை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-12-2025

இணையதள முகவரி: https://www.bankofbaroda.in/career/current-opportunities

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து