கல்வி/வேலைவாய்ப்பு

நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் எப்படி?

தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்து இந்த ஆண்டு கட்-ஆப் மாறுபடும்.

தினத்தந்தி

சென்னை,

இளங்கலை மருத்துவ படிப்புக்காக 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கும் 2025ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 04, 2025 அன்று நடைபெறுகிறது.இந்த ஆண்டு முதல் இயற்பியல் & வேதியியல் பிரிவுகளில் தலா 45, உயிரியலில் 90 என 180 கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். கட்-ஆப் கடந்த ஆண்டில் பொதுப்பிரிவுக்கு 720 - 162, ஓபிசி & எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு 161 - 127, பிற 161-127 என்ற வரம்பில் இருந்தது. தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்து இந்த ஆண்டு கட்-ஆப் மாறுபடும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற கடும் போட்டி நிலவுகிறது. மேலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து