புதுச்சேரி

பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம்

காரைக்கால் மாவட்ட ஓய்வுபெற்ற பிரான்ஸ் ராணுவ வீரர்கள் சார்பில் பிரான்ஸ் தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட ஓய்வுபெற்ற பிரான்ஸ் ராணுவ வீரர்கள் சார்பில் பிரான்ஸ் தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரான்ஸ் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பிரான்ஸ் மற்றும் இந்திய தேசிய கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பிரெஞ்சு உலகப்போர் நினைவுத்தூண் பகுதிக்கு வந்தனர்.

பின்னர் பிரெஞ்சு துணைத்தூதர் ஆண்கேல்பாரா, பிரெஞ்சு அலுவலக அதிகாரி ஆண்சிசில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பிரெஞ்சு சங்க நிர்வாகி பதிஜெய்சங்கர் ஆகியோர் உலகப்போர் நினைவு தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இரு நாட்டு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து