புதுச்சேரி

கொரோனாவுக்கு, காரைக்கால் பெண் பலி

கொரோனா தொற்றுக்கு காரைக்கால் பெண் பலியானார்.

தினத்தந்தி

புதுச்சேரி

கொரோனா தொற்றுக்கு காரைக்கால் பெண் பலியானார்.

189 பேருக்கு தொற்று

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 149 பேர் புதுச்சேரியையும், 30 பேர் காரைக்காலையும், 9 பேர் ஏனாமையும், ஒருவர் மாகியையும் சேர்ந்தவர் ஆவர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 30 பேர், வீடுகளில் 1,203 பேர் என 1,233 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 215 பேர் குணமடைந் தனர்.

பெண் பலி

இந்தநிலையில் காரைக்காலில் 59 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியானார். காரைக்கால் தர்மாபுரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ஆவார். இதனால் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,964 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் தொற்று பரவல் 8.18 சதவீதமாகவும், குணமடைவது 98.12 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 247 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,031 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 3 ஆயிரத்து 687 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 76 ஆயிரத்து 267 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை