பெங்களூரு

மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்; 2 வாலிபர்கள் சாவு

பெங்களூருவில், மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா சுலகுண்டே கிராமத்தை சேர்ந்தவர்கள் சூர்யா (வயது 19), மகேஷ் (20), குமார் (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நெலமங்களாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்ததும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.

குலுவனஹள்ளி என்ற பகுதியில் சென்ற போது எதிரே வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சூர்யா, மகேஷ் பரிதாபமாக இறந்தனர். குமார் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை