செய்திகள்

வாலிபருக்கு அடி-உதை

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு சிலம்பரசனை வழிமறித்த சுபாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தகாத வார்த்தையால் பேசி கையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கினார்கள்.

தினத்தந்தி

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பவுண்டு தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் என்கின்ற அயன் (வயது 28). இவருக்கும் ஈக்காட்டை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் சிலம்பரசன் புன்னப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சுபாஷ் மற்றும் அவரது நண்பர்களான கோபி என்கிற டைகர் கோபி, ராம்மோகன், தேவராஜ் ஆகியோர் தகாத வார்த்தையால் பேசி கையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கினார்கள். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து அவர் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை