இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 58 பெட்டிகளில் 6 லட்சத்து 93 ஆயிரத்து 970 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. பின்னர் அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் மத்திய தொகுப்புக்காக புனேவில் இருந்து சென்னைக்கு 27 பெட்டிகளில் வந்த 3 லட்சத்து 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.