மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தினத்தந்தி

மது விற்பனை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்தன.

அதை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை, பெத்திக்குப்பம் மேம்பாலம், சின்ன ஓபுளாபுரம் டாஸ்மாக் கடை அருகே, பொம்மாஜிகுளம் கிராமம், மாநெல்லூர் ஏரிக்கரை மற்றும் மாதர்பாக்கம் ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

10 பேர் கைது

அப்போது மேற்கண்ட இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக கும்மிடிப்பூண்டி காட்டுக்கொல்லை தெருவைச்சேர்ந்த சிவகுமார் (வயது 39), காந்தி நகரைச்சேர்ந்த செல்வம் (35), சிந்தலகுப்பம் பிரபு (27), மதுரை உத்தமபுரத்தை சேர்ந்த வேல்முருகன் (20), பேரையூரைச்சேர்ந்த முருகன் (34), மாதர்பாக்கம் விநாயக நகரைச்சேர்ந்த வெங்கடேசன் (48), ஜேம்ஸ் (58), தாணிப்பூண்டியை சேர்ந்த ஏகாம்பரம் (50), திருப்பதி (49), மாநெல்லூரைச்சேர்ந்த ரவிச்சந்திரன் (58) ஆகிய 10 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 120 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை