மாவட்ட செய்திகள்

தமிழக சிறைகளில் கொரோனா தாக்கி 12 சிறை ஊழியர்கள் பலி

தமிழக சிறைகளில் கொரோனா தாக்கி 12 சிறை ஊழியர்கள் பலி தடுப்பூசி போடும் பணி தீவிரம்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சிறைகளில் 2-வது அலை கொரோனா தாக்குதலில் 12 சிறை ஊழியர்கள் பலியானார்கள். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37 ஊழியர்கள், ரிமாண்டு கைதிகள் 26 பேர் மற்றும் தண்டனை கைதி ஒருவர் சிகிச்சையில் உள்ளனர்.

சிறைத்துறை இயக்குனர் சுனில்குமார் சிங் அறிவுறுத்தலின்படி தமிழக சிறைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பு முகாம்கள் மூலம் நடந்து வருகிறது. தகுதியான சிறைத்துறை ஊழியர்கள் மற்றும் தண்டனை கைதிகள் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ரிமாண்டு கைதிகளில் 69 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேற்கண்ட தகவல்கள் சிறைத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து