மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளை எரித்த வழக்கில் 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளை எரித்த வழக்கில் 3 பேர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 25). இவர் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் முதியவர் ஒருவரை தாக்கி கொண்டிருந்தனர்.

இதை பார்த்த யுவராஜ், அவரை ஏன் தாக்குகிறீர்கள்? என்று கேட்டதற்கு 3 பேரும் சேர்ந்து யுவராஜை தாக்கி அவரது மோட்டார் சைக்கிளை எரித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசில் அளித்த புகாரின் பேரில், காட்டாவூர் பெரியகாலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார் (வயது 22), சூர்யா (23), ராஜேஷ் (24) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து