மாவட்ட செய்திகள்

மது விற்ற 7 பேர் கைது

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபானம் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தேனி:

கடமலைக்குண்டு போலீசார் நேற்று தங்கம்மாள்புரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது தங்கம்மாள்புரம் யானைகஜம் ஓடை அருகே மதுபானம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அண்ணாநகர் மூலவைகை ஆற்றங்கரை பகுதியில் மது விற்பனை செய்த அதே கிராமத்தை சேர்ந்த மணி (61) என்பவரையும், கண்டமனூரில் மதுபானம் விற்ற பாண்டீஸ்வரன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கம்பம் பகுதியில் மது விற்ற கம்பம் நேருஜி தெருவை சேர்ந்த சுப்பையா (60) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்த 14 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வருசநாடு வைகைநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர்.

அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர், ராயர்கோட்டையை சேர்ந்த சின்னச்சாமி (35) என்றும், தப்பியோடியவர் சிங்கராஜபுரத்தை சேர்ந்த செல்வேந்திரன் (38) என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 97 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தப்பியோடிய செல்வேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

வீரபாண்டி பகுதியில் மது விற்ற வயல்பட்டி ஓடைத்தெருவை சேர்ந்த தங்கராஜ் (47) மற்றும் வீரபாண்டியை சேர்ந்த மணி (54), போடேந்திரபுரம் நடுத்தெருவை சேர்ந்த சென்றாயன் (39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்துருந்து 27 மது பாட்டில்கள் மற்றும் ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து