மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 7 பேர் கைது

கும்பகோணத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

தினத்தந்தி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.212 கோடியை வழங்க கோரி ஆயிரம் நாட்களுக்கு மேலாக கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கும்பகோணத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான வேம்புக்குடி சுங்கச்சாவடி அருகே கரும்பு விவசாயிகள் கருப்புக்கொடி காட்ட முயன்றனர்.

இதனையடுத்து முதல்-அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்றதற்காக கரும்பு விவசாயிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை