மாவட்ட செய்திகள்

டெல்லியில் இருந்து 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அரசின் போக்கால நடவடிக்கையால் குறைந்து வருகிறது.

தினத்தந்தி

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதற்காக கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை தமிழகத்திலேயே கூடுதலாக உற்பத்தி செய்யவும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்தநிலையில் டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் சென்னை பழைய விமான நிலையம் வந்தது. அதில் முககவசங்கள், மருத்துவ பரிசோதனை கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தன. அந்த பாசல்களை விமானத்தில் இருந்து இறக்கி தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா. பின்னர் அவைகளை வாகனம் மூலம் சென்னையில் உள்ள ஓமந்தூரா அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து