மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 9,027 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது

9,027 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது

தினத்தந்தி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹ தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்களிலும், திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் வாயிலாகவும் இதுவரை 18 ஆயிரத்து 573 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 9,027 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கெண்டு தீர்வு காணப்பட வேண்டும்.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை அவயம் வழங்குதல், சுயஉதவிக்குழு அமைத்து அதன் வாயிலாக கடனுதவி வழங்குதல், மாவட்ட தெழில் மையம், மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக கடனுதவி வழங்குதல், பள்ளி, கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தெகை, சுயதெழில் தெடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்குதல் ஆகியவை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன், முடநீக்கு வல்லுனர் இனியன், தெண்டு நிறுவனத்தினர் கலந்து கெண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து