மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு 24 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை அருகே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு 24 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் மாதவன்(வயது 21). இவர் சம்பவத்தன்று அவரது உறவினரான காந்தரூபி என்பவரது வீட்டின் அருகே பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சின்னதுரை மகன் இளையராஜா எதற்காக எங்கள் வீட்டின் அருகே பட்டாசு வெடிக்கிறீர்கள் என கேட்டு மாதவனை ஆபாச வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து நடந்த தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் காந்தரூபி, மாதவன் மற்றும் இளையராஜா தரப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். பின்னர் இரு தரப்பினரும் எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் இளையராஜா, ராமச்சந்திரன் உள்பட 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது