மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிய 17 வாகனங்களுக்கு ஒரே நாளில் ரூ.4 லட்சத்து 27 ஆயிரம் அபராதம்

சென்னை வடக்கு சரக துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் மற்றும் அலுவலர்கள் நேற்று திருவள்ளூரை அடுத்த பட்டரைபெருமந்தூர், பேரம்பாக்கம், மப்பேடு போன்ற சுற்று வட்டார பகுதிகளில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

அப்போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவன பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தகுதிச்சான்று முடிந்த, சாலை வரி கட்டாத, அனுமதிக்கு புறம்பான வாகன இயக்கம் மற்றும் பல குற்றங்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் 9 தனியார் நிறுவன வாகனங்கள் உள்பட மொத்தம் 17 வாகனங்களுக்கு இணை கட்டணவசூல் மற்றும் நிர்ணய ரூ.1 லட்சத்து 97 ஆயிரம், சாலைவரி இலக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 4 வாகனங்கள் தகுதிச்சான்று இல்லாதது மற்றும் சாலை வரி கட்டாதது போன்ற குற்றங்களுக்காக பறிமுதல் செய்து மப்பேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து