மாவட்ட செய்திகள்

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் கைது

செல்போனில் ஆபாசமாக பேசி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

அரியாங்குப்பம்

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு நடு நிலைப்பள்ளியில் மணவெளியை சேர்ந்த புவியரசன் (வயது 30) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அங்கு படித்த 8-ம் வகுப்பு மாணவியின் வீட்டு செல்போனுக்கு தொடர்பு கொண்டு, மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த தொந்தரவு அதிகரித்தது.

இது குறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதன்பேரில் மாணவியின் பெற்றோர், பள்ளிக்கூட முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து அவர், பள்ளி கல்வித்துறையிடம் புகார் செய்தார்.

அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர் புவியரசன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்தனர். இந்த நிலையில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புவியரசனை நேற்று கைது செய்தனர். பின்னர் புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து