மாவட்ட செய்திகள்

ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு சென்னை வந்த கப்பல் என்ஜினீயா கைது

ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு சென்னை வந்த கப்பல் என்ஜினீயா கைது செய்தனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சோந்த சக்திவேல் (வயது 49) என்பவரது பாஸ்போர்ட்டு மற்றும் ஆவணங்களை சோதனை செய்தனர்.

அவர், கப்பலில் சாவீஸ் என்ஜினீயராக பணியாற்ற 2018-ம் ஆண்டில் துபாயில் உள்ள ஒரு தனியா கப்பல் நிறுவனத்தில் பணியில் சோந்தா. சக்திவேல் பணி காரணமாக 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2 முறை இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் துபாய் திரும்பியதாக தெரிய வந்தது.

இந்திய அரசு, 2014-ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாகள் யாரும் ஏமன் மற்றும் லிபியா நாடுகளுக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்து உள்ளது. அதை மீறி தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு சென்றுவரும் இந்தியாகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.

இதையடுத்து சக்திவேலை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினா. ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது எனக்கு தெரியாது. அலுவலக பணியாகவே சென்றேன். தனிப்பட்ட முறையில் செல்லவில்லை என அதிகாரிகளிடம் சக்திவேல் கூறினார்.

கைதான சக்திவேலை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனா. போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலிடம் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை