மாவட்ட செய்திகள்

உத்திரமேரூரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.தர்மன், நகர செயலாளர் ஜெயவிஷ்ணு முன்னிலை வகித்தனர். காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

அப்போது, கூடியிருந்த பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் ஆகியவை வழங்கப்பட்டது. தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் பாபு, அத்திவாக்கம் ரமேஷ், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கங்காதரன், துரை பாபு மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் முககவசங்களை இலவசமாக அளித்தனர். மேலும் பஸ்களில் சென்ற பொதுமக்களுக்கும், கடைவீதியில் இருந்த வியாபாரிகளுக்கும் முககவசங்களை அ.தி.மு.க.வினர் வழங்கினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை