மாவட்ட செய்திகள்

நாம் தமிழர் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம்; சீமான் பங்கேற்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கர் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினத்தந்தி

நாம் தமிழர் கட்சி சார்பில், போரூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கர் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறும்போது, நான் முதல்-அமைச்சரை சந்திக்கும் போதும் நளினி விடுதலை குறித்து பேசினேன். அதற்கு அவர், வழக்கு உள்ளது என கூறிவிட்டார். மாநில அரசின் கையிலேயே நளினி விடுதலை உள்ளது என நீதிமன்றம் கூறி உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தாய் மொழியை படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எங்கிருந்தும் ஹஜ் பயணத்துக்கு செல்லலாம் என்ற நிலையை கொண்டு வரவேண்டும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து