மாவட்ட செய்திகள்

‘முடிந்தால் என்னை பிடியுங்கள்’ என போலீசுக்கு சவால் விடுத்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

‘முடிந்தால் என்னை பிடியுங்கள்’ என போலீசுக்கு சவால் விடுத்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.

தினத்தந்தி

பெரம்பூர்,

திருவள்ளூர் கபிலன் தெருவைச் சேர்ந்தவர் ஹரி என்ற ஹரிகரன் (வயது 22). இவர் மீது செம்பியம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, 2 கொலை முயற்சி, வழிப்பறி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவர் தொடர்ந்து செம்பியம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதுடன், வியாபாரிகளை மிரட்டி மாமூல் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். அவரை செம்பியம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தீவிரமாக தேடி வந்தார்.

இதற்கிடையில் ஹரிஹரன், முடிந்தால் என்னை பிடியுங்கள் பார்க்கலாம் என செம்பியம் போலீசாருக்கு சவால் விடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இந்தநிலையில் செம்பியம் ரமணா நகர் பகுதியில் பதுங்கி இருந்த ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை