மாவட்ட செய்திகள்

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை

பட்டிவீரன்பட்டியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தினத்தந்தி

பட்டிவீரன்பட்டி :

பட்டிவீரன்பட்டி சுயம்புநாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆகர்ஷண பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்பு வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆகர்ஷண பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டி குடைமிளகாய் தீபம், எலுமிச்சை தீபம், தேங்காய் விளக்கு தீபம் ஏற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் சாவடிபஜார் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையெட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து