மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர்- கிரு‌‌ஷ்ணகிரி இடையே 50 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட ரெயில் போக்குவரத்து - மீண்டும் தொடங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்பத்தூர் - கிரு‌‌ஷ்ணகிரி இடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

நாடு சுதந்திரமடைந்த பின்னர் கேரளாவின் ஓலவக்கோடு ரெயில்வே கோட்ட நிர்வாகத்தில் இருந்து திருப்பத்தூர் கோட்டம் தொடங்கப்பட்டது.

திருப்பத்தூரில் இருந்து ஓசூர் பகுதி வளர்ச்சிக்காக திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி வரை ரெயில் பாதை அமைத்து ரெயில்கள் இயக்கப்பட்டன. இது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்பொழுதும் இந்த ரெயில்பாதை திருப்பத்தூர், பெரியகரம், கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி வரை 45 கிலோமீட்டர் தூரம் வரை அப்படியே உள்ளது. இந்த பாதையை சீரமைத்து ரெயில் தண்டவாளங்கள் அமைத்து திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி வரை மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

திருப்பத்தூர் தற்போது மாவட்ட தலைநகரமாக வளர்ந்துள்ளது. இதனை சுற்றியுள்ள எண்ணற்ற கிராமங்களின் மக்கள் தொகை அதிகம். மேலும் திருப்பத்தூர், ஜவ்வாதுமலை மற்றும் ஏலகிரிமலை வாழ் மக்கள் கொண்டபகுதி ஆகும். அருகில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திருப்பத்தூரில் இருந்து பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு வரை செல்கிறார்கள். ஓசூரில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளதால் இப்பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள்.

இவர்கள் ரெயில் மூலம் சென்றால் எளிதில் அந்த ஊரை அடையலாம். நேரம், கட்டணம் குறைவு. முதலில் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி வரை உள்ள ரெயில் பாதையை சீரமைத்து பெங்களூரு வரை நீடிக்க வேண்டும்.

திருப்பத்தூர் - ஓசூர் வரை 110 கிலோமீட்டர் தூரம் ரெயில் பாதை திட்டத்தின் முதல் கட்டமாக திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி 45 கிலோமீட்டர் பாதையை மீண்டும் புதுப்பித்து ரெயில்வே அமைச்சகம் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும்.

தற்போது ரெயில்கள் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டுமானால் ஜோலார்பேட்டை வந்து அங்கிருந்து பங்காருபேட்டை, கிருஷ்ணராயபுரம் வழியாக செல்ல வேண்டும்.

திருப்பத்தூரில் இருந்து ரெயில் பாதை தொடங்கப்பட்டால் பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு எளிதில் செல்லலாம். இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள்.

மேலும் திருப்பத்தூர் ரெயில்வே ஜங்ஷன் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அதற்கு முன்னோட்டமாக திருப்பத்தூரில் கூடுதலான ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருப்பத்தூரில் பிளாட்பாரங்கள், நடைமேடை வசதிகள் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை