மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பா.ஜனதா பொதுக்கூட்டம்

காவேரிப்பட்டணத்தில் பா.ஜனதா சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணத்தில் பா.ஜனதா சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ஜனதா மத்திய ஒன்றிய தலைவர் குமரையன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய தலைவர் மகேந்திரகுமார் வரவேற்று பேசினார். மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி, தென்பெண்ணை தேவராஜ், பாரத செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் தர்மலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்மன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹரிகோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பேசினர்.இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு ஒன்றிய தலைவர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து