மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் சுவரில் வண்ண ஓவியங்கள் வரைந்த சிறுவர்-சிறுமிகள்

சென்னை மாநகரை அழகுப்படுத்தும்விதமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது சுவர்களில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டிகளை அகற்றியும், மீண்டும் அதில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்க அந்த சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் வரையும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

தினத்தந்தி

அதன்படி போரூர் லட்சுமி நகரில் சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பூங்காவின் சுற்றுச்சுவரில் மாநகராட்சி சார்பில் வண்ண ஓவியம் வரையப்பட்டது. எனவே பூங்கா அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரில் வெளியாட்கள் யாரும் சுவரொட்டிகள் ஒட்டி அசுத்தம் செய்யாத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் குடியிருப்புவாசிகளே தங்களின் குழந்தைகள் மூலமாக சுவரில் வண்ண ஓவியங்கள் வரைய முடிவு செய்தனர்.

இதற்காக தயாநிதி, ஆனந்தகுமார் ஆகிய 2 ஓவியர்களின் உதவியுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரில் மீன், யானை, சிறுத்தை, கார், மரங்கள் என வண்ணமயமான ஓவியங்களை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்-சிறுமிகள் வரைந்தனர். கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டு இருந்த அந்த ஓவியங்களை அந்த வழியாக செல்பவர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்