மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிலாளர் சங்கத்தினர் போராடி வருகின்றனர். குறிப்பாக தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார் மயம் ஆக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 2 நாள் பொது வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.

திருவள்ளூர் நகரின் மைய பகுதியான உழவர் சந்தை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. திருவள்ளூர் மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் செவ்வை ஜெயபால் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது திடீரென உழவர் சந்தை அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 429 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு,

கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநிலத்தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அனைத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் 125 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை பகுதிகளில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை, மீஞ்சூர்

ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் பிரதான சாலையில் நடந்த சாலை மறியலில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 147 பெண்கள் உள்பட 202 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மீஞ்சூரில் நடத்த போராட்டத்தில் மீஞ்சூர் பஜாரில் இருந்து அஞ்சலகம் நோக்கி பேரணியாக தமிழ்நாடு தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் துணை பொது செயலாளர் தாமோதரன் தலைமையில் 58 பெண்கள் உள்பட 208 பேர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி நகராட்சிக்கு எதிரே உள்ள மாநில நெடுந்சாலையில் எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டு மத்திய அரசு உடனடியாக 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து