மாவட்ட செய்திகள்

வைகை, பல்லவன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக வைகை, பல்லவன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மதுரை,

திருச்சி அருகில் உள்ள அரியலூர் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக, அந்த பாதையில் செல்லும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையிலிருந்து வருகிற 30, 31-ந் தேதி, அடுத்த மாதம் 6-ந் தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ. எண் 12636) மற்றும் குருவாயூரிலிருந்து ஜனவரி 9-ந் தேதி புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எண் 16127) ஆகிய ரெயில்கள் மேற்கண்ட நாட்களில் திருச்சியில் இருந்து அரியலூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் பாதை வழியாக இயக்கப்படும்.

அதேபோல, மதுரையில் இருந்து வருகிற 30, 31-ந் தேதி மற்றும் ஜனவரி 6-ந் தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண் 12636) தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதனால், மேற்கண்ட நாட்களில் சென்னையில் இருந்து காரைக்குடி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12605) தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு