மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில் 48 பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம்

சிதம்பரத்தில் நேற்று நடந்த விழாவில் 48 பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்களை கலெக்டர் தண்டபாணி வழங்கினார்.

புவனகிரி,

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா சிதம்பரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கினார். பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

விழாவில் 48 பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை கலெக்டர் தண்டபாணி வழங்கி பேசியதாவது:-

உழைக்கும் பெண்கள் தங்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக வெகுதூரம் நடந்து சென்றும், பஸ்களில் சென்றும் பணிக்கு செல்வதில் உள்ள இன்னல்களை போக்கும் உயரிய நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ அதற்கான மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளது. நடப்பு ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் 3,705 உழைக்கும் பெண்கள் பயன்பெற உள்ளனர். இதில் 815 பேர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவார்கள். 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளும் பயனடைவார்கள்.

இத்திட்டத்துக்கு விண்ணப்பித்த 10 ஆயிரத்து 514 பேரில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 110 பயனாளிகளில் இப்பகுதியைச் சேர்ந்த 48 உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தை பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு பிறரிடம் விற்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ கூடாது. இதர பயனாளிகளும் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவின் ஒப்புதலுடன் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் தண்டபாணி பேசினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா