விருதுநகர்,
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வனுக்கு வாக்கு கேட்டு திரைப்பட நடிகர் ரவிமரியா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு புதிய பேருந்து நிலையம், சிவன்கோவில், காந்திமைதானம், விருதுநகர் ஒன்றியம் நக்கலக்கோட்டை, சின்னையாபுரம், அப்பையநாயக்கன்பட்டி, சாத்தூர் ஓன்றியம் குண்டல குத்தூர் கணபதியாபுரம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் வைகைச்செல்வனுடன் சேர்ந்து திறந்த வேனில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். புதிய பஸ்நிலைம் முஸ்லீம் பகுதியில் வேட்பாளர் வைகைச்செல்வன் பேசும்போது :
அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் குடியுரிமை சட்டம் ரத்து செய்யப்படும் என்பதை ஆனித்தரமாக முஸ்லீம் மக்களின் முன்பு தெரியப்படுத்துகிறேன். இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டபோது, தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று துணிந்து சொன்னவர் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது இஸ்லாமிய பெருமக்களின் நலனுக்காக, அவர்கள் நோன்பு திறக்கும் நன்னாளில் அவருடைய சொந்த செலவில் எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். அதை போல் கடந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த 5 ஆண்டு காலத்தில் என்னுடை சொந்த செலவில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
அதே போன்று அல்அமீன் பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வேறு பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுதி வந்தனர்.
அதனையறிந்து உடனடியாக 10 நாட்களில் அல்அமீன் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைத்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுத முனைப்பாக இருந்தேன் என்பதை தெரியபடுத்தி கொள்கிறேன். அதே போன்று ஜமாத்க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தந்துள்ளேன். அது போன்று தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, ஆர்.டி.ஓ.அலுவலகம், போக்குவரத்து போலீஸ் ஸ்டேசன், தீயணைப்பு காவல் நிலையம், கட்டங்குடி பகுதியில் அம்மா நகரம் என்ற பெயரில் 200 பசுமை வீடுகளை கட்டி தந்துள்ளேன்.
இனி வரும் காலங்களில் கூடுதலாக 500 வீடுகளை கட்டி தருவேன். மேலும்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அகாடமி, அம்மா மினி கிளினிக், மதுரை அரசு மருத்துவ மனைக்கு இணையாக ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்து இருக்கிறோம்.
இப்படி எண்ணற்ற பணிகளை மேற்க்கொண்டுள்ளோம். பொதுமக்களிடம் வாக்கு கேட்க அ.தி.மு.க.வை சேர்ந்த நாங்கள் நேரடியாக வந்து வாக்கு கேட்கிறோம். எதிர்கட்சியில் அப்படி இல்லை. அவருக்குபதில் யார் யாரோ வந்து ஓட்டு கேட்கிறார்கள். அ.திமு.க. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் வாசிங்மெஷின் இலவசம், சோலார்அடுப்பு, 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், முதியோர் உதவி தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி தரப்படும் என்பன உள்பட 163 திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சி மலர்கிற போது அனைத்து பலன்களும் கிடைக்கும். அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த விதமான அடாவடி, அராஜகம், அத்துமீறல், சட்டம் ஓழுங்கு பாதிப்பு, மத மோதல் எதுவும் இல்லாமல் அ.தி.மு.க. ஆட்சி செயலாற்றி கொண்டிருக்கிறது.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு அருப்புக்கோட்டை தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் சக்திபாண்டியன், அம்மா பேரவை செயலாளர் சோலைசேதுபதி, சேரன் இஸ்மாயில், அன்சாரி, புளியம்பட்டி சீனிவாசன், தகவல் தொழில் நுட்ப பிரிவு கருப்பசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராம்பாண்டியன், கோகுல், விஜயராகவன், சின்னச்சாமி உள்பட நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.