மாவட்ட செய்திகள்

கோவை ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி

கோவை ஏல மையத்தில் தேயிலைத்தூள் மற்றும் இலை ரக தேயிலை விலை வீழ்ச்சி அடைந்தது.

தினத்தந்தி

கோவை,

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் மின்னணு முறையில் தேயிலை ஏலம் விடப்படுகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான தேயிலையை ஏலம் எடுத்து வருகிறார்கள். இதன்படி நடைபெற்ற 51-வது ஏல விவரம் வருமாறு:-

இந்த ஏலத்துக்கு 3 லட்சத்து 52 ஆயிரத்து 156 கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 665 கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இது 62 சதவீதம் ஆகும். 42 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு கிலோ தேயிலைத்தூள் 107 ரூபாய் 69 காசுக்கு ஏலம் போனது. ஆனால் கடந்த வாரம் ஒரு கிலோ 112 ரூபாய் 73 காசுக்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.5.4 காசு விலை குறைந்தது. மொத்தம் ரூ.2 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரத்து 343-க்கு தேயிலை தூள் ஏலம் போனது.

இதேபோல் இலை ரக தேயிலை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 422 கிலோ ஏலத்துக்கு வந்தது. அதில் 90 ஆயிரத்து 412 கிலோ ஏலம் போனது. இது 58 சதவீதம் ஆகும். இதில் 32 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ இலை ரக தேயிலையின் விலை 101 ரூபாய் 4 காசு ஆகும். இது கடந்த வாரம் ரூ.107.16 காசு ஆக இருந்தது. இதனால் இந்த வாரம் இலை ரக தேயிலை விலை கிலோவுக்கு ரூ.6.12 காசு குறைந்தது. இந்த வாரம் ரூ.91 லட்சத்து 35 ஆயிரத்து 228-க்கு இலை ரக தேயிலை ஏலம் போனது.

இந்த ஏலத்தில் மொத்தம் 3 லட்சத்து 8 ஆயிரத்து 77 கிலோ தேயிலைத்தூள் மற்றும் இலைரக தேயிலை ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ரூ.3 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரத்து 571 ஆகும். இந்த ஏலத்தில் தேயிலைத்தூள் மற்றும் இலை ரக தேயிலை விலை கடந்த வாரத்தை விட வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.

மேற்கண்ட தகவலை கோவை தேயிலை ஏல மையம் வெளியிட்டு உள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்