ஆஸ்பத்திரியில் நோயாளியிடம் மருத்துவ சேவை குறித்தும், ஆஸ்பத்திரி சார்பில் வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், புறநோயாளிகளிடமும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். போதிய டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.