மாவட்ட செய்திகள்

இடைத்தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு

பெங்களூரு வசந்த்நகரில் நேற்று மகளிர் அமைப்புகள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தினத்தந்தி

பெங்களூரு,

மாநிலத்தில் காலியாக உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள், 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் 3 நாடாளுமன்ற தொகுதிகளில், எந்த தொகுதியை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு விட்டு கொடுக்கலாம் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றி காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மந்திரிசபை விரிவாக்கத்தில் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து