மாவட்ட செய்திகள்

குன்றத்தூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது கன்டெய்னர் லாரி மோதல்; 2 பேர் பலி

குன்றத்தூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

லாரிகள் மோதல்

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் முருகவேல் (வயது 43). லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது லாரியில் மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இரும்பு

கழிவுகளை ஏற்றிக்கொண்டு வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே வந்து கொண்டிருந்தார். லாரியை டிரைவர் லாரன்ஸ் (47) என்பவர் ஓட்டி வந்தார்.அப்போது லாரி பழுதானதால் சாலையோரமாக நிறுத்தினர். பின்னர் முருகவேல், அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் அன்வர் என்பவரை அழைத்து வந்து லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கார்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, சாலையோரம் பழுதாகி நின்ற இவரது லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கன்டெய்னர் லாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் லாரி உரிமையாளர் முருகவேல், மெக்கானிக் அன்வர் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கன்டெய்னர் லாரி டிரைவர் பிண்டுராய் மற்றும் பழுதாகி நின்ற லாரி டிரைவர் லாரன்ஸ் இருவரும் படுகாயம் அடைந்து, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை