மாவட்ட செய்திகள்

ஆறுமுகநேரியில் தொடர் திருட்டு: கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையன் உருவம் போலீசார் தீவிர விசாரணை

ஆறுமுகநேரியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் மூலம் கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். கார்டன் பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் 7 முறை திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து அங்கு காவலாளி நியமித்து, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 2 மணி அளவில் எஸ்.ஆர்.எஸ். கார்டன் பகுதியில் மர்மநபர் ஒருவர் துணியால் முகத்தை மூடியவாறு சென்று, வீடுகளை நோட்டமிட்டு உள்ளார். அங்கு வீடுகளில் ஆட்கள் இருந்ததால், அந்த நபர் திரும்பி சென்றுள்ளார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் அந்த கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு