மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா

நாகர்கோவிலில் ஒரே குடும்பத்த சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ஒரே குடும்பத்த சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8 பேருக்கு தொற்று

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு 20-க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைய பாதிப்பு மாநகரில் மட்டும் 12 ஆக இருந்தது.

அதாவது, நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் 2 பேரும் திருமணமாகி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூருவில் வசித்து வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட மகள்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்தனர்.

இந்தநிலையில் வயதான தம்பதியினருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனைதொடாந்து நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தம்பதியினருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு காரோனா இருப்பது உறுதியானது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதையடுத்து 2 மகள்கள், 2 மருமகன்கள் மற்றும் 3 குழந்தைகளுக்கும் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. முடிவில் 2 மகள்கள், 1 மருமகனுக்கும், 3 குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தொற்று பாதித்த அனைவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே மாநகா நல அதிகாரி விஜய்சந்திரன் தலைமையில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொற்று பாதித்த பகுதிக்கு விரைந்து சென்று, வீடு முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் அந்த பகுதி முழுவதும் உள்ள மக்களிடம் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை