மாவட்ட செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு தனி கட்டிடத்தில் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குணா தயாகர் (வயது 45) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் 3-வது கட்டிடத்தின் 2-வது மாடியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குணா தயாகர் நேற்று முன்தினம் நள்ளிரவு தான் சிகிச்சை பெற்றுவந்த அறையில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை குணா தயாகரை பரிசோதனை செய்ய வந்த டாக்டர், அவர் தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை