மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கொரோனா நிவாரண நிதி குவிகிறது

மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கொரோனா நிவாரண நிதி குவிகிறது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா நிவாரண பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகிறார்கள்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜி.ரங்கராஜ், பொதுச்செயலாளர் ஆ.மோகன், பொருளாளர் பி.எஸ்.மாதவன் ஆகியோர் நேற்று சந்தித்து, கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.40 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

அதேபோல தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ந.ராசகுமார், பொருளாளர் எஸ்.ஜோதி வீரபாண்டியன், துணைத்தலைவர் எஸ்.பி.கருணாகரன் ஆகியோர் ரூ.31 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற நில அளவை ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.ராமசுப்பு, பொதுச்செயலாளர் நந்தகோபால், பொருளாளர் பி.ராமலிங்கம், துணை செயலாளர் வரதராஜன் ஆகியோர் ரூ.20 லட்சத்து 20 ஆயிரத்து 20-க்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். அப்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடனிருந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதன் தீட்சன்யா, துணைத்தலைவர் ரோகிணி, பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஜெ.ராஜசங்கீதன் ஆகியோர் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்துக்கான காசோலையை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை